மயூர்விகார் 3ல் தமிழ் வகுப்புகள்
தில்லி, மயூர் விஹார்-3, தமிழர் நலச் சங்கத்தின் தமிழ் பயிலரங்கு மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான அகரம், இகரம், உகரம், ழகரம் மற்றும் சிகரம் நிலைகளுக்கானத் தேர்வுகள் 06.09.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 வரையில் ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார்-3, தில்லி வளாகத்தில் நடைபெற்றது.
தேர்வு எழுத இடம் தந்து ஆதரித்த ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகளுக்கு தமிழர் நலச் சங்கம் தனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
தேர்வுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் திரு. கா. சிங்கத்துரை, தலைவர், திரு. தி. பாஸ்கரன், பொதுச் செயலாளர், திரு. க. ரங்கநாதன், பொருளாளர், இணைச் செயலாளர் திரு. ஆர். சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் திரு. முத்து ரமேஷ் திறம்பட செய்திருந்தனர்.
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.' என்ற ஒளவையார் மூதுரை பாடல் சுட்டும் அறத்தின் வழியில் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால், தாய் மொழிப் பற்றுடன் தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் அனைத்து நல்நெஞ்சங்களும் பாராட்டுதல்களுக்குரியவர்கள்.