📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 18, 2026 07:33 PM

நாகர்கோவில் சபரி வர்மன் உடல் அடக்கம்

நாகர்கோவில் சபரி வர்மன் உடல் அடக்கம்

நாகர்கோவில் சபரி வர்மன் உடல் அடக்கம் - நலத்திட்ட உதவிகளை மனைவியிடம் வழங்கிய அரசு அலுவலர்கள்

உயிரிழந்த சபரி வர்மனின் மனைவிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக பணிக்கான நியமன ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோர் வழங்கினர்.

Published : July 18, 2026 at 10:40 AM IST

கன்னியாகுமரி: குட்கா பொருள்கள் விற்றதாக சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்தே 19 காயங்களுடன் மரணத்தை தழுவிய சபரி வர்மனின் உடலை, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.

நாகர்கோவில் கிளை சிறையில் சிறைக் கைதி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவத்தில், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து 4 நாட்களாக போராடி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 16) இரவு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சிறையில் இறந்த நாகர்கோவில் சபரி வர்மன் உடல் அடக்கம்#sabarivarmancase | #custodialdeathcase | #nagarcoildeath | #bodyBurial | #EtvBharatTamilNadu pic.twitter.com/47gWfcxF3z

தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினும், சபரி வர்மன் குடும்பத்தினருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்றைய தினம் அவரின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பெற்று ஊர் திரும்பினர்.

அப்போது ஊர் வைத்து, எல்லையில் அரசு அறிவித்த கோரிக்கைகளை பெறப்பட்ட பின்னரே, உடல் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த சபரி வர்மனின் மனைவிக்கு, அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டர் பணிக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும், ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, மகனின் உயர் கல்விக்காக ரூ. 1 லட்சம், 2 சென்ட் வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்காக ரூ. 3.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் சபரி வர்மனின் மனைவியிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து சபரி வர்மனின் உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரி வர்மனை (35) ஜூலை 9 அன்று, தனது மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜூலை 13 அன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

மேலும், அவரது பிரேத பரிசோதனையில், சபரி வர்மன் உடலில் 19 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சபரி வர்மன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சபரி வர்மனின் உடலை உறவினர்கள் பெற்று அதற்கு இறுதி மரியாதை செய்துள்ளனர்.