📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 04, 2026 02:01 AM

‘நான் உயிரோடு இருக்கும்வரை இனி 4 பேரும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை’

‘நான் உயிரோடு இருக்கும்வரை இனி 4 பேரும் ஒன்றாவதற்கு வாய்ப்பில்லை’

நடிகர் ரவிமோகன் தனது மனைவியை விட்டுப் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் ஆர்த்தி ரவி தனது ஒப்புதல் இன்றி இந்த அறிவிப்பு வெளியானதாக அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் ரவிமோகன் ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவர் ரூ.40 லட்சம் கேட்டநிலையில், ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளர் சுஜாதாவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குழந்தைகளின் செலவுக்காகத்தான் ஆர்த்தி இவ்வளவு பணத்தை கேட்டதாகவும், தனிப்பட்ட செலவுகளுக்காக அல்ல என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்.,

“அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உண்மையான நண்பர்களாக எனக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி. சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.

என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒருபோதும் ஒரே அறையில் ஒன்றாக இருக்கப்போவதில்லை.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்; உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.