📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 05:02 AM

நாங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம்? லிஸ்ட் போட்ட பிரேமலதா

நாங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம்? லிஸ்ட் போட்ட பிரேமலதா

நாங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வோம்? லிஸ்ட் போட்ட பிரேமலதா

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள், விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மதுராந்தகம் தொகுதியில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மணிகள் வீணாகாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் தங்களது நெல்லை உரிய முறையில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். நெல் கொள்முதல் செய்யப்பட்ட பின்னர், பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பு பகிர்ந்தளிக்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மதுராந்தகம் தொகுதிக்கு கிடைக்கும் தொகுதி வளர்ச்சி நிதி முழுமையாக தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்படும்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேவையில்லாமல் பேசுவதை விட வேண்டும். வார்த்தையை விட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

'தவளை தன் வாயால் கெடும்' என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுகளால் பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்" எனத் தெரிவித்தார்.