📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 27, 2026 01:33 PM

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே இரு அவைகளும் முடங்கி வருகின்றன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி இரு அவைகளிலும் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டன. அதேபோல, தர்மேந்திர பிர்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாணவர்கள் போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது 10 ஆண்டுகள் சிறை, ரூ.10 கோடி அபராதம் விதிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று நடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது ஏன்? என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கபட்டுள்ளது.