📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 09:01 AM

நாவடக்கம் இல்லாதவர் தான் உதயநிதி ஸ்டாலின்

நாவடக்கம் இல்லாதவர் தான் உதயநிதி ஸ்டாலின்

திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்-அமைச்சர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை. ஆடி 18-ம் நாள் இன்று, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. "திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?" நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்-அமைச்சரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா முதல்-அமைச்சரை பாக்குறது இருக்கட்டும்.. நம்ம ஊரு விவசாயிகளை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தாரா?. தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என முதல்-அமைச்சர் விஜயிடம் கர்நாடக முதல்-மந்திரி கூறி விட்டார். ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்-அமைச்சர் விஜய். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்-அமைச்சருக்கு திராணி இல்லை என பேசினார். இந்நிலையில் இது குறித்துதவெக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

நாவடக்கம் இல்லாதவர்

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.

தளபதியின் நாகரிக வளர்ப்பு

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.