நாய், பன்னி குட்டி போடுது.. திருநங்கைகளை அசிங்கப்படுத்திய மோகன் ஜி.. கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டோரதி படம் வெளியாகி பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் டோரதி படம் குறித்தும் திருநங்கைகள் குறித்து இயக்குநர் மோகன் ஜி விவாதம் ஒன்றில் படுமோசமாக பேசி இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கநர் மோகன் ஜியை கடுமையாக கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
கார்த்திக் சுப்புராஜ்: அந்த வீடியோவில், இயக்குநர் மோகன் ஜி ஒரு விவாத நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவருடன் கலந்துரையாடும்போது, தனது படத்தை பற்றியும் பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார். அப்போது அந்த திருநங்கையிடம், திருமணம் செய்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? திருமணத்துக்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள்? என்று திரும்பத் திரும்பக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மோகன் ஜிக்கு கண்டனம்: அதற்கு பதிலளித்த அந்த திருநங்கை, ஒரு ஆண் தன்னை விரும்பி திருமணம் செய்துகொண்டால், இருவரும் அன்போடும் மகிழ்ச்சியோடும் ஒன்றாக வாழ்வார்கள் என்றும், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான் திருமண வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்றும் தெளிவாக விளக்கியிருக்கிறார். ஆனால், மோகன் ஜி மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு, இறுதியில், திருநங்கையால் இயல்பான முறையில் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்.
அது தான் மனிநேயம்: இதை கேள்வி என்று சொல்வதைக்கூட தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், ஒரு பெண்ணின் முகத்துக்கு நேராக, பொதுவெளியில், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்ற ஊடகங்களில் இப்படியொரு கருத்தை முன்வைப்பது அவர்களை இன்சல்ட் செய்து இருக்கிறார். இது அவர்களுக்கு எதிரான உளவியல் ரீதியான வன்முறையாகவே நான் பார்க்கிறேன். திருநங்கைகளையும் மற்றவர்களை போல சமமான மனிதர்களாக பார்க்க வேண்டும் என்பதுதான் அடிப்படை மனிதநேயம். ஆனால், அதற்கு மாறாக பொதுவெளியில் இவ்வளவு வெளிப்படையாக திருநங்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நாய்,பன்னி கூட குட்டி போடுது: திருமணம் செய்துகொள்வதன் நோக்கம் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தானா? அது தான் வாழ்க்கையின் லட்சியமா? நாய், பன்னிகூடத்தான் குட்டி போடுகிறது. மனிதர்களின் வாழ்க்கையை குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட முடியுமா? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்துக்கு பிறகும் பல்வேறு காரணங்களால் குழந்தை பிறக்காமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக வாழத் தகுதியற்றவர்களா? அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள கூடாதா? குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான இறுதி இலக்காக இருக்க முடியாது. திருநங்கைகள் தங்களுக்கான அன்பையும் துணையையும் தேடுவதும், திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ விரும்புவதும் மற்ற மனிதர்களை போலவே இயல்பான ஒன்று. அப்படியிருக்கும்போது, அவர்களின் திருமண வாழ்க்கையை குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை மட்டுமே வைத்து மதிப்பிடுவது மிகவும் தவறான அணுகுமுறை.
கண்டனம்: ஒரு திரைப்படத்தை பற்றிய விமர்சனங்களையும் விவாதங்களையும் யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். ஆனால், அதற்காக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களின் மனித மாண்பையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோகன் ஜி உங்களுடைய கருத்தைநான் வன்மையாக கண்டிக்கிறேன் என கார்த்திக் சுப்புராஜ் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
I Strongly Condemn.... https://t.co/u8n6StgXpg