Nainar Nagendran: காங்கிரஸ் பினாமியாக தவெக.. விஜயை விளாசியெடுத்த நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran: காங்கிரஸ் பினாமியாக தவெக.. விஜயை விளாசியெடுத்த நயினார் நாகேந்திரன்!
இன்றைய தேதிக்கு விஜய் தான் முதலமைச்சர். எந்த குற்றச்சாட்டையும் அவர் பொறுப்பேற்க மறுப்பது தனது பதவியில் விஜய் தவறிவிட்டார் என்பது அர்த்தமாகும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பினாமியாக தமிழக வெற்றிக் கழகம் செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசை கடுமையாக விஜய் நேரடியாக முதலமைச்சரான விஷயம் ஆச்சரியமான விஷயம். தமிழ்நாட்டில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். முதலமைச்சர் பொறுப்பை உணர்ந்து அவர் நடக்கவில்லை. சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமையகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு, டெண்டர் விட்டதில் ஊழல் என 20 நாட்களுக்குள் இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளது. இன்றைய தேதிக்கு விஜய் தான் முதலமைச்சர். எந்த குற்றச்சாட்டையும் அவர் பொறுப்பேற்க மறுப்பது தனது பதவியில் விஜய் தவறிவிட்டார் என்பது அர்த்தமாகும். ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். கடைகளில் தவெகவினர் மாமூல் வாங்க தொடங்கி விட்டனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒதுக்கியது பற்றிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் பினாமி தான் தமிழக வெற்றிக் கழகம். ஏனென்றால் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் மேடையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மேடையில் இருந்தார். இது நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருந்தது என நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும் திமுக கூட்டணியிலும், தவெக கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்பி பதவியை பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தில் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதை முன்வைத்து அந்த பதவியைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து இடைத்தேர்தல் பற்றி பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தேர்தல் முடிவுகள் வந்து 20 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இடைத்தேர்தல் என்றால் அது மக்களை ஏமாற்றுவது மாதிரி. எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற எண்ணத்தில் இப்படி செய்கிறார்கள். தேவையில்லாமல் ஒரு இடைத்தேர்தல் நடைபெறுகிறது "என கூறினார். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னால் அமமுக எம்.எல்.ஏ., காமராஜ் கடத்தி செல்லப்பட்டார். அவர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததில் குதிரை பேரம் நடந்துள்ளது எனவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து அண்ணாமலை பற்றி பேசிய நயினார் நாகேந்திரன், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இதுதொடர்பாக அவர் யாரிடமும் பேசவில்லை. மேலும் எனக்கும், அண்ணாமலைக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அவர் ராஜினாமா செய்வது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி