டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று தமிழர்களின் பெருமை நாள்!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று தமிழர்களின் பெருமை நாள்!

டில்லி ஜனாதிபதி மாளிகையில் 66 பேருக்கு பத்ம விருதுகளை இன்று (மே 25) திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். அவர் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குகிறார்.

தஞ்சாவூர்: இன்று டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. இந்த விருதுகளுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த 14 பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மிக உயர்ந்த சிறப்புப் பதக்கங்களில் ஒன்றான பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முன்பாக அறிவிக்கப்படுகின்றன.இந்த ஆண்டு மொத்தம் 131 விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 5 பத்ம விபூஷண், 13 பத்மபூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் இடம்பெற்றுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (மே 25) ஜனாதிபதி மாளிகையில் ஞானதந்திர மண்டபத்தில் நடைபெறும் விழாவில், முதல்கட்டமாக 66 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்குகிறார். மீதமுள்ள நபர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குகிறார். பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபிஆர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பத்ம பூஷன் விருதுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு மருத்துவத்துக்காகவும், எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு சமூக சேவைக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (கலை), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), ஆர்.கிருஷ்ணன் (கலை), எச்.வி. ஹண்டே (மருத்துவம்), புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), கே. ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்), கே. விஜய்குமார் (சிவில் சர்வீஸ்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கல்வி), திருவாரூர் பக்தவத்சலம் (கலை), வீழிநாதன் காமகோடி (அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேல் (விளையாட்டு) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் விழாவில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குகிறார்.

இந்த ஆண்டு பத்ம விருதுகள் பட்டியலில், நாட்டின் கடைக்கோடியில் இருந்து எவ்வித விளம்பரமும் இன்றி சமுதாயத்திற்குப் பங்காற்றிய 45-க்கும் மேற்பட்ட "அறியப்படாத நாயகர்கள்" (Unsung Heroes) கண்டறியப்பட்டு கௌரவிக்கப்படுவது இந்த விழாவின் மிக முக்கிய சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.