📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 05:04 AM

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்

கோலிவிட்டின் முன்னணி நடிகையாக திரிஷா விளங்கி வருகிறார். சமீபத்தில் சூர்யா உடன் இணைந்து நடித்த கருப்பு படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

தமிழக அரசியலில் இவரை தொடர்புப்படுத்தி அடிக்கடி விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரிஷா தனது பாட்டியின் 98-வது பிறந்த நாளை கொண்டாடினார். இது தொடர்பாக திரிஷா தனது பாட்டியுடன் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், "இந்த வயதில் இத்தகைய நாடகத்தனமான விஷயங்கள் சங்கடத்தைத்தான் தரும்... போய் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்" என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் புருவங்களை தூக்கி பார்க்கும் வகையில் ஒரு எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

2-வது பதிவில் "நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும். நல்லதையே செய்யுங்கள், நல்லவராக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

3-வது பதிவில் "இதுதான் உங்களுக்கான அனைத்தும் இறுதியில் சிறப்பாக அமையும் காலகட்டம்" என்று குறிப்பிட்டார்.