📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 11:02 AM

நீட் எதிர்ப்பு கூட்டியகம் முன்னெடுத்துள்ள ஆன்லைன் கையெழுத்து இயக்கம்

நீட் எதிர்ப்பு கூட்டியகம் முன்னெடுத்துள்ள ஆன்லைன் கையெழுத்து இயக்கம்

நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்

கையெழுத்து இயக்கம்

அண்மையில் இந்த நீட் எதிர்ப்பு கூட்டியகம் சார்பில் #ban neet என்ற மாபெரும் கையெழுத்து இயக்கமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, மாநிலத்திற்கும் கல்வி சூழலுக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் ஏற்ற மருத்து மாணவர் சேர்க்கையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

நியாயமான மாநில அரசின் கட்டுப்பாட்டு முறையிலான கல்வி சேர்க்கை முறையை மீட்டெடுத்தல் மற்றும் கிராமப்புற அரசுப்பள்ளி வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட , பொருளாதார ரீதியாக பிந்தங்கிய மாணவர்கள் தொழில்முறை கல்வியிலிருந்து கட்டமைப்பு ரீதியாக விலக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களின் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

நீட் என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!

அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம்.

அந்த இலக்கோடு #BanNEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன்

இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம்.எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.