📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 01, 2026 12:04 AM

நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு

நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்கள் ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு

புதுடில்லி: நீட் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்களை ரத்து செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.

டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சில வாக்குறுதிகளை அளித்தது. அதை ஏற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் செப்.5ம் தேதி டில்லியில் கண்டன பேரணியை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந் நிலையில், டில்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றம் தலையிட கோரி மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், நீட் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய கோரி உள்ளார். போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள முதல் தகவல் அறிக்கைகளை அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்துமாறும் மனுவில் மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.