📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 01:32 PM

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்​தினர் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்​தினர் முற்றுகை போராட்டம்

சென்னை: நீட் தேர்வை முழு​வது​மாக ரத்து செய்ய வலி​யுறுத்​தி, இந்​திய மாணவர் சங்​கத்​தினர் ஆளுநர் மாளி​கையை முற்றுகையிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு நடத்​தப்​பட​வுள்​ளது. இதனிடையே நீட் வினாத்​தாள் கசிவு விவகாரம் நாடு முழு​வதும் பெரும் சர்ச்​சை​யானது. மேலும் நீட் தேர்வில் இது​வரை பலமுறை முறை​கேடு​கள் ஏற்​பட்​டுள்​ள​தால் நீட் தேர்வை முழு​மை​யாக ரத்து செய்ய வேண்​டும் என்று எதிர்க்கட்​சிகள் உட்பட பலர் வலி​யுறுத்​துகின்​றனர்.

இந்​நிலை​யில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்​டும், நீட் தேவையில்​லை, மாணவர்​களின் உரிமை​களை பாது​காக்க வேண்டும், மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்தி இந்​திய மாணவர்​கள் சங்​கம் சார்​பில், சென்​னை​யில் நேற்று ஆளுநர் மாளிகை முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. இந்​திய மாணவர் சங்​கத்​தைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், சைதாப்​பேட்டை நீதி​மன்​றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மத்​திய அரசு மற்​றும் கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானுக்கு எதி​ராக கண்டன கோஷங்​களை எழுப்​பினர். இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்​கிச் சென்ற மாணவர்​களை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதனால் மாணவர்​களுக்​கும் காவல்துறையினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. தொடர்ந்து மாணவர்​கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்​ற​போது போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.

போலீ​ஸார் கைது செய்ய தொடங்​கியதும் மாணவர்​கள் சாலையில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சாலை​யில் அமர்ந்த மாணவர்​களை காவலர்​கள் குண்​டுக்​ கட்​டாக கைது செய்து பேருந்​துகளில் ஏற்றி அருகே இருந்த சமு​தாய நலக்கூடத்துக்கு அழைத்​துச் சென்​றனர். இதனிடையே போலீஸாருக்​கும்- போ​ராட்​டக் காரர்​களுக்​கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்​பட்ட போது பெண் காவலர்​கள்​ உட்​பட 5 போலீஸாருக்​கு கா​யம்​ ஏற்​பட்​டது.