📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 23, 2026 06:03 AM

நீட் தேர்வு, EWS இடஒதுக்கீட்டை நீக்க வலியுறுத்தி தி.க சார்பாக இருசக்கர வாகனப் பேரணி

நீட் தேர்வு, EWS இடஒதுக்கீட்டை நீக்க வலியுறுத்தி தி.க சார்பாக இருசக்கர வாகனப் பேரணி

நீட் தேர்வு, EWS இடஒதுக்கீட்டை நீக்க வலியுறுத்தி தி.க சார்பாக இருசக்கர வாகனப் பேரணி

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை திராவிட கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் தொடங்கி லைத்தார்.

Published : August 22, 2026 at 8:43 PM IST

சென்னை: நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் நீக்க வேண்டும் என இருசக்கர வாகனத்தில் திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய மாநில அளவிலான மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தை திராவிட கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மாநில அளவில் நடத்தும் இருசக்கர வாகன பேரணிக்கு அந்தந்த மாவட்ட உள்ளூர் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வாகன பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆறு குழுவாக பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இன்றயை தினம், திராவிடர் கழகம் இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற வாகன பரப்புரைப் பயணத்தை திராவிட கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தை திராவிட கழக துணை தலைவர் கலி பூங்குன்றன் தொடங்கி வைக்கும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "எங்கள் நீதிக்கான போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் இந்த பேரணியின் நியாத்தை அறிந்து பேரணிக்கு அனுமதி வழங்கி கள்ளது. நீட் தேர்வுக்கும், மருத்துவர்களுக்கும் என்ன சம்மந்தம்? நீட் தேர்வுக்கு இன்று இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திமுகவும், திராவிடர் கழகமும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தது.

69 சதவீதம் இடஒதுக்கீடு இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளோடு உள்ள முதல் தலைமுறை மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை வைக்கிறார்கள் ,அங்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது.

நீட் எதிர்ப்பை மக்களிடம் கொண்டு சென்று, நீட்டின் பாதிப்பை விளக்குவதற்காக தான் இந்த விழிப்புணர்வு பேரணி தொடங்கப்பட்டுள்ளது. உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து வேண்டும். இதுவும் தேவையில்லாத ஒன்று. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூக நீதியை குறைக்கும் வகையில், உயர் ஜாதியினருக்கு மட்டும் பொருளாதார ரீதியிலான 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டு ஏராளமான மோசடிகளுக்கு வழி வகுத்துள்ள EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.