📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 29, 2026 02:33 PM

நீட் தேர்வு: மாணவர் போராட்டத்தை விடுவிக்க உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வு: மாணவர் போராட்டத்தை விடுவிக்க உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டெல்லியில் போராட்​டம் நடைபெற்றது.

அதில் ஈடு​பட்ட மாணவர்​களை உடனடி​யாக விடுவிக்கவேண்​டும் என்​று மத்​திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் நடைபெற்றபோது மாணவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசியதாகப் புகார் எழுந்​தது. இதனால் மாணவர்கள் மத்தியில் கடுங்கொந்தளிப்பு ஏற்பட்டதுடன் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

திரு தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தபோதிலும் அத்​து​மீறிய காவல்​துறை​யினர்மீது நடவடிக்கை எடுக்கக்​கோரி தொடுக்கப்பட்ட வழக்​கு​கள் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்​வில் விசாரணைக்கு வந்​தது.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், போராட்​டம் நடை​பெற்ற இடங்​களில் உள்ள அனைத்துக் கண்காணிப்பு, ‘டிரோன்’களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவுகளைப் பாது​காக்க வேண்​டும் என உத்தரவிட்டனர்.

மேலும், போராட்​டத்​தில் கலந்துகொண்ட மாணவர்​களின் புகைப்​படங்​கள், தனி​நபர் விவரங்​களைச் சமூக ஊடகங்கள் அல்​லது பொது​வெளி​யில் வெளி​யிடவும் தடைவிதித்தனர்.

குற்​றப்பின்​னணி இல்​லாத மாணவர்​கள்மீது எவ்​விதக் கடுமை​யான அல்​லது பழி​வாங்​கும் நடவடிக்​கை​யும் எடுக்​கப்​படக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பல மாநிலங்​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்​கப்​பட்​டுள்ள 18 வயதிற்​குட்​பட்ட சிறு​வர்​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்​துறையை அளவுக்கு அதிகமாகப் பயன்​படுத்​தி​யது, மாணவர்​கள்மீது தடியடி நடத்​தி​யது ஆகியவை தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் பதிலளிக்க டெல்​லி, மகா​ராஷ்டி​ரா, பீகார், கேரளா, மத்​தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதையடுத்து வழக்கு வி​சா​ரணை ஆகஸ்ட்​ 3ம்​ தேதிக்​குத் தள்ளிவைக்கப்பட்டது.