📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 12:03 PM

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெயிப்பதற்காக சுப்மன் கில் செய்த செயல்.. சச்சின், கோலி கூட செய்யலை

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெயிப்பதற்காக சுப்மன் கில் செய்த செயல்.. சச்சின், கோலி கூட செய்யலை

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெயிப்பதற்காக சுப்மன் கில் செய்த செயல்.. சச்சின், கோலி கூட செய்யலை

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராக தனது சொந்த செலவிலேயே 4 முதல் 5 நெட் பந்துவீச்சாளர்களை அங்கு அழைத்துச் செல்ல அதிரடி முடிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு முன்னணி நட்சத்திர வீரர் தனது சொந்தப் பணத்தில் தனக்கு மட்டும் பந்துவீச வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களை வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வது இதுவே முதல்முறையாகும். கில்லின் இந்த முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி போன்ற தலைசிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் கூட இதுபோன்ற விஷயத்தை செய்ததில்லை.

சுப்மன் கில் அக்டோபர் 23 அல்லது 24 அன்று நியூசிலாந்துக்கு செல்கிறார். அதற்கு முன்பாக அக்டோபர் 18 அன்று முல்லன்பூரில் தொடங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக களம் காண்கிறார். பொதுவாக வெளிநாட்டுத் தொடர்களுக்கு பிசிசிஐ நெட் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்லும். எனினும், தனது பேட்டிங் நுணுக்கங்களை மெருகேற்றவும், தனியாக மணிக்கணக்கில் வலைப்பயிற்சி செய்யவும் சுப்மன் கில் தனது சொந்த பணத்தைச் செலவழிக்கத் தயாராகியுள்ளார். அவரது இந்தத் தனித்துவமான பயிற்சி நிச்சயம் பலன் தரும் என நம்பப்படுகிறது.

நியூசிலாந்தின் பச்சைப் புல் நிறைந்த ஆடுகளங்களும், குளிரும் இந்திய சூழலுக்கு முற்றிலும் எதிரானவை. அங்கு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது இந்திய பேட்டர்களுக்கு பெரும் சவாலாகும். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளை மட்டும் முடித்துவிட்டு, கே.எல். ராகுல் உள்ளிட்ட வீரர்களுடன் முன்கூட்டியே டெஸ்ட் பயிற்சிக்கு கில் சென்று விடுவார். கடைசி ஒருநாள் போட்டிக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையே வெறும் 4 நாள்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. டெஸ்ட் தொடருக்கு விரிவான பயிற்சி தேவை என பிசிசிஐயிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கில், இப்போது சொந்த முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிக மோசமான ரெக்கார்டை வைத்துள்ளது. அங்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினமான ஒன்றாக இருக்கும் நிலையில் கேப்டன் சுப்மன் கில் இந்த அதிரடி முயற்சியில் இறங்கி இருக்கிறார்.