📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 02:00 PM

தேனிசைத் தென்றல் தேவா மறைவு: “தமிழ் திரையுலகுக்கே பேரிழப்பு’ முதல்வர் விஜய் உருக்கமான பதிவு

தேனிசைத் தென்றல் தேவா மறைவு: “தமிழ் திரையுலகுக்கே பேரிழப்பு’ முதல்வர் விஜய் உருக்கமான பதிவு

1990-களில் தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய தேனிசைத் தென்றல் தேவா, தனது 75-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் விஜய் இரங்கல் பதிவுஇந்தச் சூழலில், தமிழக முதல்வர் விஜய், தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்த தேவா மறைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்ததுடன், பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார் என்று தேவாவின் திரைப்பயணம் குறித்துப் பதிவிட்டுள்ளார் விஜய். தேவாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரையிசை உலகிற்கும் பேரிழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்மேலும், தேவாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.