📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 23, 2026 12:03 PM

நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்: மாவட்ட வாரியாக பட்டியல்

நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்: மாவட்ட வாரியாக பட்டியல்

-நமது நிருபர்-தமிழகம் முழுவதும், 40 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், கணக்கில் வராத பணம், 1.73 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 'கூகுள் பே' வழியே 1.60 கோடி ரூபாய், ஊழியர்கள் லஞ்சமாக பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கில் வராத பணம் 13,78,207 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என, லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாவட்டம் வாரியாக சிக்கிய பணம் குறித்து பட்டியல் பின்வருமாறு:

* பெருங்குடி, சென்னை- ரூ.4260 (ரொக்க பணம்), ரூ.43,42,563 (ஜி-பே)

* தண்டையார்பேட்டை, சென்னை -ரூ.46 ஆயிரம் (ரொக்க பணம்)

* பல்லாவரம், சென்னை- ரூ.4820 (ரொக்க பணம்)

* மாதவரம், சென்னை- ரூ.2ஆயிரம் (ரொக்க பணம்), ரூ.1,85,550 (ஜி-பே)

* ஆலந்தூர், சென்னை- ரூ.27 ஆயிரம் (ரொக்க பணம்), ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் (ஜி-பே)

* திருவள்ளூர் நகராட்சி அலுவலகம்- ரூ.42,180 (ரொக்க பணம்), ரூ.8,52,500 (ஜி-பே)

* காஞ்சிபுரம், குன்றத்தூர் நகராட்சி அலுவலகம்- ரூ.80,650 (ஜி-பே)

* வேலூர், காட்பாடி தாலுகா அலுவலகம் - ரூ.2,300 (ரொக்க பணம்), ரூ.11,040 (ஜி-பே)

* ராணிப்பேட்டை, அரக்கோணம் நகராட்சி அலுவலம்- ரூ.7,64,500 (ஜி-பே)

* செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி அலுவலகம்- ரூ.14,56,356 (ஜி-பே)

* கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை நகராட்சி அலுவலகம்- ரூ.7,70,000 (ஜி-பே)

* கடலூர், பண்ருட்டி தாலுகா அலுவலகம்- ரூ.4600 (ரொக்க பணம்), ரூ.6,84,221 (ஜி-பே)

* விழுப்புரம் தாலுகா அலுவலகம்- ரூ.80,650 (ஜி-பே)

* திருவண்ணாமலை, செய்யாறு நகராட்சி அலுவலகம்- ரூ.1,90,000 (ஜி-பே)

* திருப்பத்தூர், வாணியம்பாடி நகராட்சி அலுவலகம்- ரூ.41 ஆயிரம் (ஜி-பே)

* திருச்சி (அரியமங்கலம் மண்டல அலுவலகம்)- ரூ.15,100 (ரொக்க பணம்)

* அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம்- ரூ.8 ஆயிரம் (ரொக்க பணம்)

* பெரம்பலூர் நகராட்சி அலுவலகம்- ரூ.25,450 (ஜி-பே)

* கரூர், குளித்தலை நகராட்சி அலுவலகம்- ரூ.51 ஆயிரம் (ரொக்க பணம்), ரூ.4,02,000 (ஜி-பே)

* புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி அலுவலகம்- ரூ.32,500 (ஜி-பே)

* தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம்- ரூ.32 ஆயிரம் (ரொக்க பணம்)

* திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம்- ரூ.13 ஆயிரம் (ரொக்க பணம்)

* நாகப்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம்- ரூ.8200 (ரொக்க பணம்), ரூ.19,16,280 (ஜி-பே).

* மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சி அலுவலகம் - ரூ.52,280 (ரொக்க பணம்)

* கோவை, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் - ரூ.1,38,900 (ரொக்க பணம்), ரூ.4,68,999 (ஜி-பே)

* ஈரோடு, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் - ரூ.1,54,000 ஆயிரம் (ரொக்க பணம்)

* தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி- ரூ.5,750 (ரொக்க பணம்), ரூ.3,13,000 (ஜி-பே)

* திருப்பூர், அவிநாசி நகராட்சி அலுவலகம்- ரூ.5,53,767 (ரொக்க பணம்), ரூ.1,00,000 (ஜி-பே)

* மதுரை, மாநகராட்சி இன்ஜினியர் செக்ஷன் அலுவலகம்- ரூ.1,35,000 (ரொக்க பணம்)

* விருதுநகர் தாசில்தார் அலுவலகம், சிவகாசி- ரூ.10,500 (ரொக்க பணம்)

* தேனி, ஆண்டிப்பட்டி பிடிஓ அலுவலகம்- ரூ.12 ஆயிரம் (ரொக்க பணம்)

* திருநெல்வேலி, மேலப்பாளையம் வார்டு அலுவலகம்- ரூ.9300 (ரொக்க பணம்), ரூ.91,500 (ஜி- பே)

* கன்னியாகுமரி, பஞ்சாயத்து அலுவலகம்- ரூ.10 ஆயிரம் (ரொக்க பணம்)

* தென்காசி, கடையம் பிடிஓ அலுவலகம்- ரூ.16 ஆயிரம் (ரொக்க பணம்), ரூ.10,00,200 (ஜி-பே)

* தூத்துக்குடி, காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் - ரூ.7,500 (ரொக்க பணம்), ரூ.19,66,500 (ஜி-பே)

* ராமநாதபுரம் நகராட்சி வாகனம் நிறுத்துமிடம்- ரூ.12,750 (ரொக்க பணம்)