📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema November 28, 2026 10:30 AM

நம்மை மறந்து சிரிக்க வைக்கும் ‘நவோரியா’

நம்மை மறந்து சிரிக்க வைக்கும் ‘நவோரியா’

‘நவோரியா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக, குறிப்பாக, குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படமாக இருக்கும். நம்மை மறந்து சிரிக்கும் வகையில் 100 விழுக்காடு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘நவோரியா’ தயாரிக்கப்பட்டுள்ளது என்று அதன் இயக்குநர் சிம்புதேவன் கூறியுள்ளார்.

இத்திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிம்புதேவன், முழுமையாக கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சிம்புதேவனின் படங்களில் எப்போதும் கதாபாத்திரங்களின் பெயர்கள் வித்தியாசமாக நகைச்சுவை அம்சங்களோடு இருக்கும்.

“ஒரு கேலிச்சித்திரக் காட்சியை உருவாக்கும் கலைஞராக இருந்ததால், இதுபோன்ற வித்தியாசமான பெயர்களையும் கதாபாத்திரங்களையும் என்னால் எளிதாக உருவாக்க முடிகிறது. அங்கிருந்து கிடைத்த அனுபவம்தான் இதற்குக் காரணம். ஓர் இயக்குநர் கட்டாயம் எழுத்தாளராகவும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை,” என்றார் அவர்.

இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் பற்றியும் சிம்புதேவன் பேசினார்.

“விஜய் சார் மிகவும் நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடிய நபர். எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார்,” என்றார் சிம்புதேவன்.