📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 11:32 AM

Nooru Sami Day 2 Box Office

Nooru Sami Day 2 Box Office

சென்னை: விஜய் ஆண்டனி, சுவாசிகா, லிஜோமோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் நூறு சாமி. சசி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே சசியும், விஜய் ஆண்டனியும் இணைந்த பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ஹிட்டடித்திருந்தது. எனவே இந்தப் படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் சசி. 90களிலிருந்து திரைப்படங்கள் எடுத்துவரும் அவர்; தன்னுடைய படங்களில் உறவுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல், எமோஷன்கள் உள்ளிட்டவைகளை வைத்து அட்டகாசமாக படம் எடுத்தவர். பிச்சைக்காரன் படத்தில் எல்லாம் அவர் வைத்த அம்மா சென்ட்டிமென்ட் இன்றுவரை உயிர்ப்போடு இருக்கிறது. சூழல் இப்படி இருக்க மீண்டும் விஜய் ஆண்டனியை வைத்து நூறு சாமி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் சுவாசிகா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறது.

தியேட்டர்களில் ரிலீஸ்?: இந்தப் படமானது ரிலீஸுக்கு முன்னதாகவே செலிபிரிட்டிகளிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. அனைவருமே கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். திரைத்துறையினரிடம் வெளியீட்டுக்கு முன்பாக படம் சூப்பர் பெயரை பெற்றிருந்ததால்; மக்களிடமும் அதே ரிசல்ட் வருமா என்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவலோடு நேற்று முன்தினம் படமானது தியேட்டர்களில் ரிலீஸானது. ரசிகர்கள் பலரும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்கள்.

படம் எப்படி ஓகேயா?: சாமானிய ரசிகர்களுக்கும் படம் பிடிக்கவே செய்திருக்கிறது. வழக்கமான சசியின் எமோஷனகள், பெண்களுக்கு தேவையான கருத்துக்கள் ஆகியவைகள் படத்தில் நிரம்பியிருந்தன. முக்கியமாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நூறு சாமி எக்கச்சக்க உயரத்தை அடைந்திருக்கிறது. தனியாக முதலில் படம் பார்த்த பெரும்பாலானோர்; தங்களது குடும்ப உறுப்பினர்களையும் அடுத்தடுத்து அழைத்து சென்று படம் பார்க்கிறார்கள்.

சுவாசிகாவுக்கு பாராட்டு: படத்தின் பெரிய பலமாக சுவாசிகா திகழ்கிறார். இது அவருக்கு லைஃப் டைம் ரோல் என்றும்; கண்டிப்பாக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என்றும் ஆரூடங்கள் கூறப்பட்டிருக்கின்றன. விதவைகளுக்கு மறுமணம் செய்வதுதான் இந்தப் படத்தின் ஒன் லைன். அந்த லைனில் கொடுக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தை சூப்பராக தனது நடிப்பின் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அந்தப் படம் இரண்டாவது நாளில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

நூறு சாமி வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, முதல் நாளில் வெறும் 80 லட்சம் வரை மட்டுமே படம் வசூலித்தது. ஆனால் முதல் நாளிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்திருந்தன. இதன் காரணமாக நேற்று தியேட்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மொத்தம் 1,042 ஷோக்கள் திரையிடப்பட்டு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். மொத்தம் இரண்டு நாட்களில் நூறு சாமியின் வசூல், இரண்டு கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது. இன்றும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக மேற்கொண்டு வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.