📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 31, 2026 05:00 PM

நரேந்திர மோடி மைதானத்தில் 'ரன் அசுரனாக' மாஸ் காட்டும் சுப்மன் கில்: வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

நரேந்திர மோடி மைதானத்தில் 'ரன் அசுரனாக' மாஸ் காட்டும் சுப்மன் கில்: வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

நரேந்திர மோடி மைதானத்தில் 'ரன் அசுரனாக' மாஸ் காட்டும் சுப்மன் கில்: வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனுமான சுப்மன் கில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடர்ந்து அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த மைதானத்தில் அவர் காலடி எடுத்து வைத்தாலே ரன் மழை பொழியும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் இன்று குஜராத் மற்றும் ஆர்சிபி அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், அவர்களுக்கு சுப்மன் கில் உருவத்தில் ஒரு ஆபத்து இருக்கிறது. இதற்கு காரணம், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்த குறிப்பிட்ட மைதானத்தில் மட்டும் அவர் பல மைல்கற்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதுவரை விளையாடியுள்ள சுப்மன் கில், ஒட்டுமொத்தமாக 1,500 ரன்களுக்கும் மேல் குவித்து அசத்தியுள்ளார். டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் என அனைத்து வடிவங்களிலும் இவரது பேட்டிங் இங்கு அசைக்க முடியாததாக உள்ளது. குறிப்பாக, பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் 165.56 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் அவர் ரன்களை வாரிக் குவித்துள்ளது கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மைதானத்தில் அவரது அசாத்திய ஃபார்மிற்கு சான்றாக 4 அதிரடி சதங்களும், 7 அரைசதங்களும் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய இந்த கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் மற்றும் எல்லைகளை கில் மிகச்சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவதால், எதிரணி பந்துவீச்சாளர்களால் இவரை கட்டுப்படுத்த முடிவதில்லை.

சுப்மன் கில்லின் இந்த மிரட்டலான ஃபார்ம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இந்திய அணிக்கும் அகமதாபாத் மைதானத்தில் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் பலமாக கில், சாய் சுதர்சன், பட்லர் இருக்கிறார்கள். இவர்களை விரைவில் வீழ்த்தினால் ஆர்சிபிக்கு இரண்டாவது கோப்பை உறுதி.