📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 03, 2026 04:05 AM

நத்தம் அருகே ஆன்லைன் மூலம் பணம் மோசடி: மேலும் 5 பேர் கைது

நத்தம் அருகே ஆன்லைன் மூலம் பணம் மோசடி: மேலும் 5 பேர் கைது

நத்தம், செப். 2–திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி, ரெட்டியபட்டி, விளாம்பட்டி, வத்திபட்டி, புதுக்கோட்டை, மூங்கில்பட்டி, கவரயபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், மேலூர்-கட்டையம்பட்டியில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தை நடத்து பவர்கள் பூட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.பணத்தை இழந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் முகவர்களாகச் செயல்பட்ட காசம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 33), அவரது மனைவி அனிதா (வயது 29), அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 34), மூங்கில்பட்டியைச் சேர்ந்த வீரமணி (வயது 25) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், இச்சம்பவத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தீவிர விசாரணை நடத்திய நத்தம் காவல்துறையினர், காசம்பட்டியைச் சேர்ந்த பிரேம்நாத் (வயது 38), மகாதேவன் (வயது 42), ஜெயப்பிரகாஷ் (வயது 39), சுரேஷ் (வயது 43), நவீன் (வயது 29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் திண்டுக்கல் குற்றப் பிரிவு காவல்துறை யினரிடம் நத்தம் போலீசார் ஒப்படை த்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமறைவாக உள்ள மேலும் பலரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.