📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 23, 2026 09:01 PM

நடிகை த்ரிஷா பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ‘க்ளிக்’ வைரல்!

நடிகை த்ரிஷா பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ‘க்ளிக்’ வைரல்!

சென்னை: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை நேற்று (ஜூன் 22) கொண்​டாடி​னார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்​த​நாள் என்​ப​தால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்​பாக கொண்​டாடினர்.

அக்கட்சியினர் சார்பில் கோயில்​களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்​பட்​டன. பொது​மக்​களுக்கு பல்​வேறு நலத்​திட்ட உதவி​களை​யும் தவெக​வினர் வழங்​கினர். ரத்த தானம், அன்னதானம், மருத்​துவ முகாம்கள் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளுக்கும் ஏற்​பாடு செய்​திருந்தனர்.

முதல்​வரின் பிறந்​த​நாளை ​ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் இபிஎஸ் உள்ளிட்ட அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகை த்ரிஷா வாழ்த்து

இந்நிலையில், திரைத் துறையில் நடிகராக இருந்து, இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு, அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் த்ரிஷா. இது இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.