📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 25, 2026 06:30 PM

நடிகைகளைக் கொண்டாடுங்கள்; விமர்சிக்காதீர்கள்: தமன்னா

நடிகைகளைக் கொண்டாடுங்கள்; விமர்சிக்காதீர்கள்: தமன்னா

திரைப்பட ரசிகர்களை மகிழ்விப்பதுதான் ஒரு நடிகையாகத் தனது பொறுப்பு என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழும் தமன்னா, திரைப்படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடியும் அவர் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இதுபோக, இந்தியில் ஐந்து புதிய படங்களிலும் அவர் தீவிரமாக நடித்து வருகிறார்.

இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, அழகு குறித்தும் திரையுலக அனுபவம் குறித்தும் பேசினார்.

“ரசிகர்களை மகிழ்விப்பதே ஒரு நடிகையாக எனக்குள்ள பொறுப்பு என நினைக்கிறேன். அப்படி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளைக் கொண்டாடுங்கள்; விமர்சிக்காதீர்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “போலியான தகவல்களையும் புகைப்படங்களையும் பரப்பி ஆனந்தம் கொள்ள வேண்டாம். இது என் தாழ்மையான வேண்டுகோள்,” என்றும் தமன்னா கூறியுள்ளார்.

அவரது வேண்டுகோள் சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.