📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 08:05 PM

நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா எப்போது? முதல்வர் விஜய் தலைமையில்.. அப்டேட் கொடுத்த நாசர்

நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா எப்போது? முதல்வர் விஜய் தலைமையில்.. அப்டேட் கொடுத்த நாசர்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் இன்று, செப்டம்பர் 27-ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவது, நடிகர் சங்க கட்டட நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மூத்த நடிகை லதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாசர், நடிகைர் நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு விழா மிகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. நடிகை லதா அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த நாடக நடிகர்கள் 5 பேருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. விழா மிகவும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் நடந்தது. ஆனால், எங்களுடைய பொதுச் செயலாளர் விஷால் விழாவில் கலந்துகொள்ளாதது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த குறையை ஈடுகட்டிவிட்டோம். அவர் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது கீழே விழுந்து முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், விழாவில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

நடிகர் சங்க கட்டிடம்: இதைத்தொடர்ந்து பேசிய கருணாஸ், நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடத்திற்குள் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்பதற்காக பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, கடந்த முறை அவரை நேரில் சந்தித்தபோது வாய்வழியாக அழைப்பு விடுத்திருந்தோம். அப்போது, நிச்சயமாக வந்து கலந்துகொள்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, முறைப்படி ஒரு தேதியை முடிவு செய்து, அந்த தேதியை முதலமைச்சரிடம் தெரிவித்து, அவருடன் கலந்து பேசி, அவருடைய வசதிக்கேற்ப மண்டபத்தின் திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

சட்டப்படி நடவடிக்கை: இதைத்தொடர்ந்து பேசிய கருணாஸ், யூடியுப் தளங்களில் சிலர் நடிகர், நடிகைகள் குறித்து தவறான தகவல்களை பேசி வருகிறார்கள். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதன் அடிப்படையில், இதுவரை சுமார் 9 பேர் மீது புகார் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கிறோம். யூடியூப்பில் பிரபலங்களை பற்றி இழிவாக பேசுவதால் அதில் இருந்து காசு வருகிறது என்பதால் யார் யாரை வேண்டுமானாலும் இழிவாக பேசி வருகின்றனர். பணத்திற்காக இப்படி இழிவாக பேசுவது என்பது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும். இதை நாங்கள் சட்டரீதியாக பார்த்துக்கொள்கிறோம் என்றார்.