ஓர் அரிய வாக்குமூலம்
உலகத்தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவராக, மூத்த அரசியல்வாதியாக 93 வயதிலும் செயல்பட்டுவருபவர் பழ.நெடுமாறன். அவருடன், செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி மேறகொண்ட நேர்காணலின் தொகுப்புதான் இந்நூல்.
பழ.நெடுமாறனின் பாட்டனார் அரிய நூல்களைப் பதிப்பித்தவர். தந்தையார், 40களில் மதுரையில் தமிழ் மாநாடுகள் நடத்தியவர். ‘தமிழ்நாடு வாலிபர் சங்கம்’ சார்பில், 2ஆம் உலகப்போரில் தப்பி வந்த பர்மா தமிழர்களைக் காத்து அரவணைத்தவரும்கூட.
தமிழர் மீதான பற்றைப் பொறுத்தவரை அவர்களின் வழியில் சற்றும் பிசகாதவராகத் திகழ்கிறார் பழ.நெடுமாறன். பல்கலைக்கழக மாணவப் பருவத்திலிருந்தே போராட வேண்டிய சூழல் அவரை ஆட்கொண்டுவிடுகிறது.
அது தொடங்கி ஈழத்தமிழர் உரிமைக்காக, காவிரி நீர் பிரச்சினைக்காக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையிலிருந்து 26 தமிழர்களைக் காப்பாற்றவும், சட்டப் போராட்டம் நடத்தவும் என எண்ணற்றப் போராட்டங்களில் பழ.நெடுமாறன் வெற்றிகண்டதன் பின்னணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தரவுகள் இந்நூலில் நிறைந்துள்ளன.
மேலும், இந்நூலில் பிரபாகரன், இந்திரா காந்தி, காமராஜர், நல்ல கண்ணு, சட்டப் போராட்டங்களுக்கு துணைநின்ற வழக்கறிஞர்கள், நீதியரசர்களுடனான நட்பு குறித்த செய்திகளும் படிப்போரின் மனஇருளை அகற்றி சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.
தமிழர் தலைவர் பழ.நெடுமாறன்
புதுமலர் பதிப்பகம்
தொடர்புக்கு: 9443307681