📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 25, 2026 07:33 PM

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்.. விராட் கோலி ரெக்கார்டு முறியடிப்பு

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்.. விராட் கோலி ரெக்கார்டு முறியடிப்பு

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்த இஷான் கிஷன்.. விராட் கோலி ரெக்கார்டு முறியடிப்பு

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 81 ரன்கள் விளாசியதன் மூலம், ஒரு ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி இஷான் கிஷன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.

இவருடன் இணைந்து திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (25 ரன்கள்) ஜோடி 3வது விக்கெட்டுக்கு 66 ரன்களும், இஷான் - திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 94 ரன்களும் சேர்த்தனர்.

இந்த 81 ரன்கள் மூலம், 2026 ஆம் ஆண்டில் இஷான் கிஷனின் ஒட்டுமொத்த டி20 ரன்கள் எண்ணிக்கை 783 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2022ல் 20 போட்டிகளில் 781 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார். தற்போது டி20 போட்டிகளில் இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு வரும் இஷான் கிஷன், 2026 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த 2வது வீரராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்காட்டி ஆண்டில் (Calender Year) சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்:

மாணவர்கள் போராட்டம் பற்றி தினேஷ் கார்த்திக் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு.. “அடுத்த 10 ஆண்டுகள்..”