📅 Friday, 21 August 2026 IST | ஆவணி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 21, 2026 08:04 PM

ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு

ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டண விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் முதல் 4 பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம்.

அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.

எஸ்.பி.ஐ.யின் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பாக அடிக்கடி ஏ.டி.எம். அல்லது வங்கி கிளை மூலம் பணம் எடுப்பவர்கள், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விதியை கவனத்தில் கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ. வலியுறுத்தி உள்ளது