📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 08:04 PM

பா.ஜ., பொறுப்பாளராக சுரேந்திரன் நியமனம்

பா.ஜ., பொறுப்பாளராக சுரேந்திரன் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தமிழக பா.ஜ., இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கேரளா பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சுரேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ., தலைமை, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தமிழகத்தின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கேரளாவை சேர்ந்த முன்னாள் பா.ஜ., தலைவர் சுரேந்திரன், 56, புதுச்சேரியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பா.ஜ.,வின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேந்திரன் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் அரசியலில் நுழைந்தார். பா.ஜ., யுவ மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

கேரளா பா.ஜ., தலைவராக 2020–25 வரை பணியாற்றியுள்ளார். வயநாடு, பத்தனம்திட்டா, மஞ்ஞேசுவரம் போன்ற தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். சபரிமலை போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர். தற்போது பா.ஜ., தேசிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.