📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 21, 2026 11:04 PM

பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்

பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்

எம்.எல்.ஏ.களுக்கு கார் வழங்கப்படுவது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்று ஏற்கனவே எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வேண்டாம் என்று சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்இது குறித்து சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் அந்த அறிவிப்பு மின்சாரத் துறையில் வரவில்லை. எதற்கு விவசாயிகள் இலவச மின்சாரத்தைக் கேட்கிறார்கள்?. எங்குமே இப்போது தண்ணீர் இல்லை. அவர்கள் நம்பி இருப்பது நிலத்தடி நீரை மட்டும் தான். மோட்டார் போட்டு தான் தண்ணீர் எடுக்கிறார்கள். அதற்காகத்தான் இலவச மின்சாரம் கேட்கிறார்கள்.

வெறும் 50 ஆயிரம் பேருக்கு தான் இலவச மின்சாரம் என்றால், மீதி பேருக்கு என்ன ஆனது?. ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தை ஏற்றுகிறார்கள். நிச்சயமாக மின்சாரத் துறைக்கு வருமானம் வருகிறது. எனவே அவர்கள் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு கொடுக்கலாம்.எங்களிடம் ஏற்கனவே கார் உள்ளது. அதனால் எங்களுக்கு கார் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். அதற்கு மாற்றாக வாகனப் பராமரிப்பு தொகையில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.