பார்லிமென்ட் மழைக்கால தொடர்: 7 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு முக்கியமான ஏழு மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி துவங்கி ஆக.,13 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடு விவகாரம், நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின் வினாத்தாள்கசிவு, வெளிநாட்டு கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டு உள்ளன.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு ஏழு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக லோக்சபா செயலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் விவரம்
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகளை வெளிப்படையாக்கும் பொருட்டு மத்திய அரசு வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா 2026 கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டசபை தேர்தலின் போது இம்மசோதா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகிய அமைப்புகளுக்கு மாற்றாக விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இம்மசேதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழுவில் லோக்சபா எம்பிக்கள் 21 பேர், ராஜ்யசபா எம்பிக்கள் 10 பேர் இடம்பெற்றனர்.
வருமான வரி திருத்தம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு மாற்றாக இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 ல் இருந்து 37 ஆக அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து இருந்தது. தற்போது அதற்கான மசோதா பார்லிமென்டில் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சட்டப்பிரிவு 13(3) ன் படி பிறப்பு இறப்பை தாமதமாக பதிவு செய்வதற்கான விதிகளை கடுமையாக்கப்பட உள்ளது.
1971ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும், எளிதாக தொழில் செய்வதற்கும்,2006ம் ஆண்டு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.