📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 02, 2026 01:30 PM

பாரதிராஜா & கே பாக்யராஜ் புகழ் பேசும் ராஜ கோபுரங்கள் விழா! | Bharathiraja | K. Bhagyaraj

பாரதிராஜா & கே பாக்யராஜ் புகழ் பேசும் ராஜ கோபுரங்கள் விழா! | Bharathiraja | K. Bhagyaraj

பாரதிராஜா & கே பாக்யராஜ் புகழ் பேசும் ராஜ கோபுரங்கள் விழா! | Bharathiraja | K. Bhagyaraj

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜ் இருவரின் மரணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ராஜ கோபுரங்கள் என்ற விழாவை தமிழ் சினிமா சங்கங்கள் இணைந்து எடுக்க இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் கே செல்வமணி "மறைந்த படைப்பாளிகள் பாரதிராஜா சார் மற்றும் பாக்யராஜ் சார் இருவருக்கும் புகழ்வணக்கம் செலுத்துவது போல சிறப்பான ஒரு விழாவை நடத்த இருக்கிறோம். தமிழ் திரைப்படத்துறைக்கு அவர்களின் சேவைகள், வளர்ச்சியில் பங்களிப்பு என்னென்ன என்பதை நிறுவுவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

பாரதிராஜா சார் உயிரோடு இருக்கும் போதே இப்படி ஒரு விழாவை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னரும் இது குறித்து பேசினோம். ஆனால் அடுத்து பாக்யராஜ் சார் மறைந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியை பண்ண முடியாமல் போய்விட்டது என்று நினைத்த போது பார்த்திபன் சார் இந்த இருவருக்கும் சேர்த்து ஒரு நிகழ்ச்சியை பண்ணலாம் என்று கூறினார். எனவே இப்போது தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், FEFSI, நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை செய்ய இருக்கிறோம்.

அந்த நிகழ்ச்சியை ஆகஸ்ட் 16ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் காலையில் இருந்து இரவு வரை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதனை துவக்கி வைக்கும்படி முதல்வர் விஜய்க்கு கடிதம் கொடுத்து இருக்கிறோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இதில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் பிற மொழி சினிமாத்துறை நடிகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் முக்கியமான நிகழ்ச்சியாக இது இருக்கும் என நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.