📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 07, 2026 01:03 PM

பெசன்ட் நகரில் தவெக பிரமுகர் கொலை: பழிக்குப் பழியாக கொலை செய்த 5 பேர் கும்பல் கைது

பெசன்ட் நகரில் தவெக பிரமுகர் கொலை: பழிக்குப் பழியாக கொலை செய்த 5 பேர் கும்பல் கைது

கொலை நிகழ்ந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி. உள்படம் (கண்ணன்)

சென்னை: பெசன்ட் நகரில் தவெக நிர்​வாகி வெட்​டிக்​கொலை செய்​யப்​பட்​டார். பழிக்​குப் பழி​யாகத் தீர்த்​துக்​கட்​டிய 5 பேர் கும்​பலை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இந்த சம்​பவம் சென்​னை​யில் அதிர்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

பெசன்ட் நகர் வண்​ணான்​துறை பகு​தி​யைச் சேர்ந்​தவர் கண்​ணன் (45). அதி​முகவில் வட்​டச் செய​லா​ள​ராக இருந்த இவர், சட்​டமன்​றத் தேர்​தலுக்​குப் பிறகு தவெக-​வில் இணைந்​தார்.

மேலும், ஐ.டி. நிறு​வனங்​களுக்கு கார்​களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்​தார். இந்​நிலை​யில், கண்​ணன் நேற்று முன்​தினம் இரவு 9.20 மணி​யள​வில் வண்​ணான்​துறை ராம​சாமி அவென்​யூ, எல்​லை​யம்மன் கோவில் தெரு​வில் தனது நண்​பர்​கள் 4 பேருடன் பேசிக்​கொண்​டிருந்​தார். அப்​போது 2 பைக்​கு​களில் வந்த 5 பேர் கொண்ட கும்​பல் திடீரென கண்ணனை அரி​வாளால் வெட்​டியது.

அதிர்ச்​சி​யடைந்த கண்​ணன் உயிர் தப்​புவதற்​காக ஓட்​டம் பிடித்​தார். ஆனால், சிறிது தூரத்​திலேயே நிலை​தடு​மாறி கீழே விழுந்​தார். உடனே அந்​தக் கும்​பலைச் சேர்ந்த 3 பேர் அவரை சுற்றி வளைத்து சரமாரி​யாக அரி​வாளால் வெட்​டினர்.

இதனை பார்த்த கண்​ணனின் நண்​பர்​கள், அவரை காப்​பாற்​று​வதற்​காக சாலை​யில் கிடந்த கற்​களை எடுத்து கொலை கும்​பல் மீது வீசினர். கொலை​யாளி​களில் ஆயுதங்​களு​டன் மிரட்​டிய​தால் அவர்​கள் தப்​பிச் சென்​றனர். கண்​ணனை சரமாரி​யாக வெட்​டிய கொலை​யாளி​கள் தாங்​கள் வந்த பைக்​கு​களில் தப்​பிச் சென்​றனர்.

இதையடுத்து அடை​யாறு துணை ஆணை​யர், உதவி ஆணை​யர், இன்​ஸ்​பெக்​டர் மற்​றும் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர். கண்​ணனின் உடலை கைப்​பற்​றி, பிரேத பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

கொலை நடந்த பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்​த​போது, கொலை​யாளி​கள் அடை​யாறு ருக்​மணி நகரைச் சேர்ந்த பரணி (20), கோவிந்​த​ராஜபுரத்​தைச் சேர்ந்த ராகேஷ் (20), திரு​வான்​மியூர் பெரி​யார் நகரைச் சேர்ந்த நரேஷ் (20), இந்​திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (20), கோட்​டூரைச் சேர்ந்த மணி​கண்​டன் (20) என்​பது தெரிய​வந்​தது.

கைது செய்யப்பட்ட பரணி, ராகேஷ், ஹரி, மணி, நரேஷ்.

கைதான பரணி​யின் பெரியப்பா சிவா கடந்த 2009-ம் ஆண்டு கண்​ணன் மற்​றும் அவரது கூட்​டாளி​களால் கொலை செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

மேலும், பரணி​யின் தந்தை வேலு​வும் கடந்த 2016-ம் ஆண்டு சைதாப்​பேட்டை பகு​தி​யில் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். தந்தை மற்​றும் பெரியப்​பா​வின் கொலைக்கு பழிக்​குப் பழி​யாக கண்​ணனை பரணி மற்​றும் அவரது கூட்​டாளி​கள் கொலை செய்​துள்​ளனர்.

அதி​காரி​கள் மாற்​றம்

தவெக நிர்​வாகி கண்​ணன் வெட்​டிக்​கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், கொலை​யைத் தடுக்​கத் தவறிய​தாக​வும், கவனக்​குறை​வாகப் பணி​யாற்​றியதற்​காக​வும் அடை​யாறு காவல் துணை ஆணை​யர் கார்த்​தி​கேயன், சாஸ்​திரி நகர் சட்​டம், ஒழுங்கு இன்​ஸ்​பெக்​டர் ரோகிணி ஆகியோரை காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்றி காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நடவடிக்கை எடுத்​துள்​ளார்.