📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 07:04 PM

பேரவையில கெஞ்சுறாங்க. மதிமுக போல அதிமுக ஆகிவிடும்: அமைச்சர் செங்ஸ் சாபம்

பேரவையில கெஞ்சுறாங்க. மதிமுக போல அதிமுக ஆகிவிடும்: அமைச்சர் செங்ஸ் சாபம்

பேரவையில கெஞ்சுறாங்க. மதிமுக போல அதிமுக ஆகிவிடும்: அமைச்சர் செங்ஸ் சாபம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியதாக கூறினார்கள். இது என்ன ஆட்டு சந்தையா மாட்டுச்சந்தையா?தவெக‌ எம்எல்ஏக்கள் முதல்வர் எங்கே குதிக்க சொன்னாலும் குதிப்பார்கள். இங்கிருந்து யாரும் அங்கே செல்ல மாட்டார்கள்.

அங்கிருந்துதான் இங்கே வருவார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு சில கட்சியில் தலைவர் மட்டுமே இருப்பார்கள். அவர்களே சொல்லிவிட்டார்கள். மதிமுக போல நாங்கள் கட்சியை நடத்தக் கூடாதா என்று. முதலில் என்ன நினைத்தார்கள் எதிர்க்கட்சியாக வருவோம் என்று நினைத்தார்கள். அவர்கள் பேசிய பேச்சு இருக்கிறதே இந்த செங்கோட்டையனை ஒழித்து விட்டு தான் வேறு வேலை என்றார்கள்.

நான் சட்டமன்றத்தில் எதிரே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேரவைத் தலைவரை பார்த்து ஸ்பீக்கர் சார் ஸ்பீக்கர் சார் என கெஞ்சுகிறார்கள். இதுதான் அவர்களின் நிலை. ஒவ்வொருவரும் கற்பனை உலகில் இருக்கிறார்கள். இந்த கற்பனை உலகத்தை தூள்தூளாக்கி காட்டியவர் நமது வெற்றிக் கழக தலைவர். இவ்வாறு பேசினார்.