📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 19, 2026 06:30 PM

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சேவையில் தடங்கல்

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சேவையில் தடங்கல்

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களின் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 19ஆம் தேதி பிற்பகல் முதல் பயனீட்டாளர்கள் செயலி, இணையத்தளம் வாயிலாகச் சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

டவுன்டிடக்டர் (Downdetector) தளத்தின் அறிக்கைப்படி அமெரிக்காவில் காலை 7.45 மணி வாக்கில் (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3.46 மணி) 4,808க்கும் அதிகமானவர்கள் ஃபேஸ்புக் கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் புகார் அளித்தனர்.

அதேபோல் இன்ஸ்டகிராம் குறித்தும் டவுன்டிடக்டர் (Downdetector) தளத்தில் 2,000க்கும் அதிகமான புகார்கள் இருந்தன.

சிங்கப்பூரிலும் ஓரளவு சேவை பாதிப்பு இருந்தது. டவுன்டிடக்டர் தளத்தில் இரண்டு தளத்தையும் குறித்து மாலை 4.47 மணி வாக்கில் கிட்டத்தட்ட 800 புகார்கள் இருந்தன.

சேவை பாதிப்பு குறித்து மெட்டா நிறுவனத்திடம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாகக் கேள்வி கேட்டது. அதற்கு உடனடியாகப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.