📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 05, 2026 09:00 PM

 பெண் போலீஸ் மீது தாக்குதல் சாலையோர வியாபாரிகள் அராஜகம்

Tamil Nadu

 பெண் போலீஸ் மீது தாக்குதல் சாலையோர வியாபாரிகள் அராஜகம்

Google News Tamil Latest

சென்னை: மயிலாப்பூரில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரேவதி, 40; மெரினா காவல் நிலையத்தில், தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார்.

பிராட்வே பேருந்து நிலையம் அருகே, சாலையோரத்தில் உள்ள கடைக்கு காய்கறி வாங்க, நேற்று முன்தினம் மாலை, தன், 14 வயது மகளுடன் சென்றார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த காவியா, 20, என்பவரது கடையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் தவறுதலாக விழுந்தன.

இதில் ஆபாசமாக பேசிய காவியா, பெண் போலீஸ் ரேவதியிடம் சண்டையிட்டுள்ளார். இருவரும், தலை முடியை இழுத்து பிடித்து அடித்துக் கொண்டனர்.

ஆத்திரமடைந்த காவியா, ரேவதியின் கன்னத்தில் 'பளார்' என, அறைந்துள்ளார். அப்போது ரேவதி தான் போலீஸ் என கூறியுள்ளார்.

இதையடுத்து, சாலையோர பெண் வியாபாரிகள் ஐந்து பேர், சிறுவன், சிறுமி உட்பட பத்துக்கும் மேற்பட்டோர், ரேவதியை சூழ்ந்து தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மகளையும் அடித்துள்ளனர்.

சாலையோர வியாபாரி களின் அராஜகம், அவ் வழியாக சென்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், சம்பந்தப்பட்ட போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.