📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 29, 2026 12:32 PM

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ தலைமறைவு

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ தலைமறைவு

- நமது சிறப்பு நிருபர் -

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது போலீசில் புகார் அளித்தார். திமுக எம்எல்ஏ பணி செய்ய விடாமல் தடுத்து, திட்டி மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார். 4 பிரிவின் கீழ் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பானுமதி முன்னிலையில் இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவான திமுக எம்எல்ஏவை போலீசார் தேடி வருகின்றனர். முன் ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.