பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளையடித்தவர் கைது
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகையை கொள்ளையடித்த ஸ்ரீவைகுண்டம் இசக்கி பாண்டி, 30, கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் மதுமிதா 28, பணத்தால் தனது குழந்தைக்கு அபிஷேகம் செய்வது, பணக்கட்டுகளுடன் நகை வாங்க செல்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டார். இதையடுத்து, இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 118 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுமிதாவின் யுடியூப் பாலோயர்ஸ் பற்றிய தகவல்களை தற்போது போலீசார் சேகரித்தனர். தற்போது நகையை கொள்ளையடித்த ஸ்ரீவைகுண்டம் இசக்கி பாண்டி, 30, கைது செய்யப்பட்டார்.
நகைகளை விற்பனை செய்ய உதவிய முருகன், முருகேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.