பெரிய இன்னிங்ஸ் இருக்குனு நினைச்சா.. 32 ரன்களில் அவசரமாக விக்கெட்டை கொடுத்த ரோகித் சர்மா!
பெரிய இன்னிங்ஸ் இருக்குனு நினைச்சா.. 32 ரன்களில் அவசரமாக விக்கெட்டை கொடுத்த ரோகித் சர்மா!
திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா 35 பந்துகளில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதிரடியான தொடக்கத்தை ரோகித் சர்மா கொடுத்த நிலையில், பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவர் பிளே முடிவடைந்து சிக்ஸ் அடித்த முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 108 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் கேம்பெல் 62 ரன்களையும், ஜாங்கோ 58 ரன்களையும் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 296 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் சுப்மன் கில் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் சில ஓவர்களில் இருவரும் நிதானம் காட்டிய நிலையில், 5வது ஓவர் முதல் இருவருமே அட்டாக்கை தொடங்கினர்.
அதிலும் ரோகித் சர்மா அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட, மைதானத்தில் இருந்த ரசிகர்களின் கோஷம் விண்ணை எட்டியது. மறுபக்கம் சுப்மன் கில்லும் பவுண்டரிகளை விளாச, இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 70 ரன்களை எட்டியது. ரோகித் சர்மா பெரிய ஸ்கோரை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அல்ஜாரி ஜோசப் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மாவின் இன்னிங்ஸில் 3 சிக்ஸ், 2 பவுண்டரிகளும் அடங்கும். பவுண்டரிகள் மூலமாகவே 26 ரன்களை ரோகித் சர்மா சேர்த்திருந்தார். அவரின் டாட் பால்களே எமனாக மாறி இருக்கிறது. அதேபோல் பவர் பிளே ஓவர்களின் போது அதிரடியில் பொளந்து கட்டிய ரோகித் சர்மா, பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் பெவிலியனுக்கு திரும்பினார்.
இருப்பினும் ரோகித் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. சுமார் 2 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா களத்திற்கு திரும்பி ஹிட்மேன் மோடில் சிக்சர்களை பறக்கவிட்டதால், ரசிகர்கள் குஷியாகினர். இந்த தொடரில் ரோகித் சர்மா ஏதேனும் ஒரு போட்டியில் பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.