Latest News
November 28, 2026 08:01 PM
ஃபெர்ன்வேல் சாலை: காணாமல் போன 48 வயதுப் பெண்
காணாமல்போயுள்ள 48 வயது பாங் ஷுவு ஷியாங் என்பவர் குறித்து தகவல் அளிக்குமாறு காவல்துறை சனிக்கிழமை (நவம்பர் 28) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவர் நவம்பர் 27ஆம் தேதி இரவு 7.55 மணி அளவில் செங்காங்கில் உள்ள புளோக் 406பி, ஃபெர்ன்வேல் சாலைக்கு அருகில் சிவப்பு நிற மேல்சட்டையும் சாம்பல் நிற அரைக்கால் சட்டையும் அணிந்த நிலையில் கடைசியாகக் காணப்பட்டார்.
அவரைப் பற்றித் தகவல் அறிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணிலோ www.police.gov.sg/i-witness எனும் இணையத்தளத்திலோ காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News