📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 29, 2026 01:01 AM

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: த.வெ.க., விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: த.வெ.க., விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விக்கிரவாண்டியில் த.வெ.க., சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தமிழகம் முழுதும் இன்று 29ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது. இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில், த.வெ.க., சார்பில் ஆட்டோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் துவங்கிய ஊர்வலத்தை தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் துவக்கி வைத்தார். தொடர்ந்து, விக்கிரவாண்டி, காணை, கஞ்சனுார், கோலியனுார் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆட்டோ மூலம் மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ், கார்த்தி, அணி அமைப்பாளர் பிரித்விராஜ், பாலாஜி, மணி, சம்பத், ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் முத்து, ஜான்பீட்டர், பாரதி, மணிராஜன், ரமேஷ், ஸ்ரீதர், ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.