📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 27, 2026 03:33 PM

பஹ்ரைனில் ஜனநாயகன்: தமிழ் ரசிகர்கள் கொண்டாட்டம்

பஹ்ரைனில் ஜனநாயகன்: தமிழ் ரசிகர்கள் கொண்டாட்டம்

பஹ்ரைனில் ஜனநாயகன்: தமிழ் ரசிகர்கள் கொண்டாட்டம்தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் நடிப்பில் வெளியான JanaNayagan திரைப்படத்தை முதல் காட்சி மற்றும் சிறப்பு காட்சிகளுடன் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த இந்த திரைப்படத்தால் இசை முரசு முழங்க ரசிகரின் ஆரவாரம் கொண்டாட்டத்தில் பஹ்ரைன் திருவிழா போல் காட்சியளித்தது இந்த நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பும் நல்ல ஆதரவும் தந்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. படம் வெளியாவது தெரிந்த முதல் நாளில் இருந்து அதற்கான ஆயத்தை ஏற்பாடுகளை செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் த. வெ. க.தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியின் போது EPIX சினிமா நிர்வாக குழுவை பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் செந்தில் மற்றும் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நசீம், மெல்வின், லெட்சுமணன், வினோத், அமல்தாஸ் சானு மற்றும் மகளிர் குழு பொறுப்பாளர் தனலெட்சுமியால் நிர்வாகிகள் குழுவை சிறப்பித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். - பஹ்ரைனில் இருந்து நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்