📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 19, 2026 04:33 PM

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: பீலே, ஜெர்மனி சாதனைகளைத் தகர்த்த இங்கிலாந்து vs பிரான்ஸ் ஆட்டம்!

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: பீலே, ஜெர்மனி சாதனைகளைத் தகர்த்த இங்கிலாந்து vs பிரான்ஸ் ஆட்டம்!

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: பீலே, ஜெர்மனி சாதனைகளைத் தகர்த்த இங்கிலாந்து vs பிரான்ஸ் ஆட்டம்!

புகாயோ சகாவின் ஹாட்ரிக் கோல் மற்றும் மைக்கேல் ஒலிஸின் அசிஸ்ட் சாதனை உட்பட, கால்பந்து ஜாம்பவான் பீலே மற்றும் ஜெர்மனியின் பல தசாப்த கால உலகக் கோப்பை சாதனைகள் இந்த ஒரே போட்டியில் தகர்க்கப்பட்டுள்ளன.

Published : July 19, 2026 at 2:08 PM IST

ஹைதராபாத்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான விறுவிறுப்பான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த இந்த மோதலில், இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மொத்தம் 10 கோல்களை விளாசின.

இதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் புகாயோ சகா ஹாட்ரிக் கோலையும், பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர் கிலியன் எம்பாப்பே இரண்டு கோல்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், இந்த உலகக் கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் மூலம் பல உலகக் கோப்பை சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

64 - The third-place play-off between France 🇫🇷 and England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 was the first World Cup match to see both teams score 4+ goals in 64 years, since a 4-4 between the Soviet Union and Colombia in 1962.It was also the highest-scoring game at the tournament since Hungary beat El… pic.twitter.com/z1J8WwKC8b

இந்த ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள்

64 ஆண்டுகளில் முதல் முறை

உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு தலா நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடிப்பது 64 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சோவியத் யூனியன் - கொலம்பியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிந்ததே இதற்குக் கடைசி சான்றாக இருந்தது.

44 வருட கால சாதனை தகர்ப்பு

இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 10 கோல்களானது, கடந்த 44 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச கோல் எண்ணிக்கை என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு, 1982 உலகக் கோப்பையில் ஹங்கேரி அணி எல் சல்வடோரை 10-1 (மொத்தம் 11 கோல்கள்) என்ற கணக்கில் வீழ்த்திய போட்டியே அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக இதுநாள் வரையிலும் முதலிடத்தில் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

France vs. England delivered absolute chaos 🤯- Highest-scoring FIFA World Cup match since 1982- Most goals ever in a World Cup third-place playoff- Just the 6th World Cup match in history to feature 10+ goalsPeak World Cup football 💯 pic.twitter.com/67qGxksYhc

புதிய வரலாற்று சாதனை

உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக இது மாறியுள்ளது. இதற்கு முன்னர் 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், பிரான்ஸ் அணி 6-3 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி மொத்தம் 9 கோல்கள் பதிவாகியிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இங்கிலாந்து - பிரான்ஸ் ஆட்டத்தில் மொத்தம் 10 கோல்கள் அடிக்கப்பட்டு, அந்த 68 ஆண்டு கால வரலாற்றுச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பீலேயின் சாதனையை முறியடித்த மைக்கேல் ஒலிஸ்

பிரான்ஸ் அணியின் நட்சத்திர நடுகள வீரரான மைக்கேல் ஒலிஸ், இந்த தொடரில் தனது 7ஆவது அசிஸ்ட்டை பதிவு செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஒரே உலகக் கோப்பைத் தொடரில் அதிக அசிஸ்ட்கள் வழங்கி, கடந்த 1970ஆம் ஆண்டு முதல் முறியடிக்கப்படாமல் இருந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேயின் வரலாற்றுச் சாதனையை (6 அசிஸ்ட்கள்) ஒலிஸ் முறியடித்துள்ளார்.

Mbappé making more moves 📈#FIFAWorldCup pic.twitter.com/B9kKilUapF

இதையும் படிங்க:

அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்தின் நட்சத்திர இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் இந்த ஆட்டத்தில் தனது 7ஆவது கோலை பதிவு செய்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஒரே உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியல்