பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடக்கம்: மேடையிலேயே எலிமினேஷன்; உள்ளே சென்ற 19 போட்டியாளர்கள் யார் யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடக்கம்: மேடையிலேயே எலிமினேஷன்; உள்ளே சென்ற 19 போட்டியாளர்கள் யார் யார்?
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, இதுவரை இல்லாத பல புதிய திருப்பங்களுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. தொகுப்பாளர் விஜய் சேதுபதி தலைமையிலான இந்த சீசனில், தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு, இறுதித் தேர்வாக 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களை பற்றி சிறு குறிப்பு:
'மகாநதி' சீரியல் மூலம் பிரபலமான லட்சுமி பிரியா முதல் போட்டியாளராக உள்ளே நுழைய, அவருடன் நடித்த ஷாதிகாவும் போட்டியாளராக இணைந்துள்ளார்.
'சித்து பிளஸ் 2' புகழ் சாந்தினி தமிழரசன், 'அங்காடி தெரு' பிளாக் பாண்டி, 'தென்றல் வந்து என்னை தொடும்' வினோத் பாபு மற்றும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் ஆகியோர் தங்களின் நிஜக் கதாபாத்திரத்தைக் வெளிப்படுத்த வந்துள்ளனர்.
90-களின் பிரபல தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், சீரியல் நடிகர் அவினாஷ், 'அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல் புகழ் முத்தழகி மற்றும் தான்யா ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
கன்டென்ட் கிரியேட்டர்கள்
சமூக வலைத்தளங்களில் அதிக ஆதரவை கொண்ட டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கும் இந்த சீசனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த கன்டென்ட் ரைட்டர் பிரித்விநாத், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஷ்மிதா, விஜய் டிவி கேமரா குழுவைச் சேர்ந்த முகேஷ், மிமிக்கிரி கலைஞர் அன்சார், பெங்களூருவை சேர்ந்த ஸ்வாமிதா மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர் ஜாவித் ஆகியோர் பிக் பாஸ் வீட்டை அலங்கரித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான சமானிய மக்களில் இருந்து நடத்தப்பட்ட தீவிரத் தேர்வுகளின் அடிப்படையில், பிக் பாஸ் மேடையில் நிறுத்தப்பட்ட 8 பேரில் இருந்து 3 'Common Man' போட்டியாளர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன்படி முனியம்மா, ஜேசன் மற்றும் சமா ஆகிய மூவரும் சமானிய மக்களின் பிரதிநிதிகளாகப் போட்டியிடுகின்றனர்.