📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 04, 2026 11:01 AM

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

பாட்னா: பிகாரின் பங்கிபூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில் ஜன் சுராஜ் கட்சித் தலை​வர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்​றுள்​ளார். குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் பாஜக​வும் மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரசும் வென்றன.

பிகாரின் பங்​கிபூர், குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர், மத்​திய பிரதேசத்தின் டட்​டியா ஆகிய 3 சட்டப்பேர​வைத் தொகுதிகளுக்கும் கடந்த 30ஆம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்றது. இதில் பதி​வான வாக்​கு​கள் திங்கட்கிழமை எண்​ணப்​பட்​டன. பிகாரின் பங்​கிபூர் சட்டப்பேரவைத் தொகு​தி​யில் பாஜக சார்​பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்​பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலை​வர் பிர​சாந்த் கிஷோர் உள்​ளிட்​டோர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகு​தி​யின் வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது ஆரம்​பம் முதலே பிர​சாந்த் கிஷோர் முன்​னிலை​யில் இருந்​தார். அவர் 64,151 வாக்​கு​களுடன் வெற்றி பெற்​றார். பாஜக வேட்​பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்​கு​களும் ராஷ்டிரிய ஜனதா தள வேட்​பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்​கு​களும் கிடைத்​தன.

இந்தத் தேர்தல் குறித்துப் பேசிய பிர​சாந்த் கிஷோர், “குற்​றப்பின்​னணி உடைய ஒரு​வரை பிகாரின் முதல்​வ​ராக பாஜக தலைமை நியமித்து உள்​ளது. அவரை மாற்​றி​விட்டு நல்ல தலை​வரை முதல்​வ​ராக நியமிக்க வேண்​டு​கிறேன். பங்​கிபூர் இடைத்​தேர்​தல் மூலம் இந்தக் கருத்தை மக்​கள் முன்​னிறுத்தி உள்​ளனர்,” என்று குறிப்பிட்டார்.

குஜ​ராத்​தின் மஞ்​சல்​பூர் தொகு​தி​யில் ஆளும் பாஜக சார்​பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்​கு​களுடன் வெற்றி பெற்றார். காங்​கிரஸ் வேட்​பாளர் பிக்​கா​பாய் ரபாரிக்கு 24,851 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன.

மத்​திய பிரதேசத்​தின் டட்​டியா தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் கன்​ஷ்​யாம் சிங் 66,757 வாக்​கு​கள் பெற்று வென்றார். பாஜக வேட்​பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்​கு​கள் கிடைத்​தன.

நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக பிகாரில் நடை​பெற்ற போராட்​டங்​களின்​போது மாணவ, மாண​வியர் மீது காவல்துறை துப்​பாக்​கிச்​சூடு நடத்​தியது. இதனால் ஜென்-ஸி இளையரின் வாக்​கு​கள் கிடைக்காததால் பாஜக​வுக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்​படு​கிறது.