📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 31, 2026 01:04 PM

பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை

பிளஸ் 1 மாணவி தற்கொலை - தலைமையாசிரியை மீது வழக்கு

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த 16 வயது மாணவி, பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாததால், வேறு பள்ளியில் சேர்க்குமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவியை உசிலம்பட்டி அரசு பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக அவரது தாயார் ஆலோசனை கேட்கச் சென்றுள்ளார்.

அப்போது மாணவியின் தாய் தலைமையாசிரியை முன்பு கைகட்டி நின்றதாக கூறப்படும் நிலையில், அதை கண்ட மாணவி தாயின் கையை தட்டிவிட்டுள்ளார். இதனால் மாணவியை திட்டிய தலைமையாசிரியை, பழைய பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்ட காரணம் குறித்து விசாரித்த பின்னரே சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் வீட்டிற்குச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் விமலாதேவி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Usilampatti #student #headmaster #police #thanthitv