📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 24, 2026 08:00 AM

 பிரான்சில் பிரமாண்ட ஹிந்து கோவில் செப்., 2ல் திறப்பு

 பிரான்சில் பிரமாண்ட ஹிந்து கோவில் செப்., 2ல் திறப்பு

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் அருகே கட்டப்பட்டுள்ள அந்நாட்டின் முதல் பெரிய ஹிந்து கோவில், வரும், செப்., 2ல் திறக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் அருகே உள்ள புஸ்ஸி - செயின்ட் - ஜார்ஜஸ் பகுதியில் 'பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் ஹிந்து மந்திர்' என்ற பெரிய ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவில், செப்., 2ல் திறக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, 13 நாட்கள் கலாசார திருவிழா நடக்க உள்ளது.

இது, அந்நாட்டில் ஹிந்து மற்றும் இந்திய கலாசார வாழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரான்சில் அமையும் முதல் பெரிய ஹிந்து கோவில்.

செப்., 2 முதல் 14ம் தேதி வரை 13 நாட்கள் மிக விமரிசையாக நடைபெற உள்ள இத்திருவிழாவில் ஹிந்து மத பாரம்பரியம், ஆன்மிகம், கலை மற்றும் இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

இக்கோவில் பாரம்பரிய இந்திய கல் வேலைபாடுகளுடன் இந்திய கட்டட கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு, பிரான்சில் கட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் புஸ்ஸி - செயின்ட் - ஜார்ஜஸ் பகுதியில், அடுத்த மாதம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள பிரமாண்ட ஹிந்து கோவில்.