📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 10, 2026 10:03 PM

பிரதமர் மோடி சென்னை வருகை: சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமர் மோடி சென்னை வருகை: சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11ஆம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின்கீழ், பூந்தமல்லி-வடபழனி இடையிலான 14.64 கி.மீ. தொலைவிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் முதல்வர் விஜய்யுடன் இணைந்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.

மேலும், சென்னை ஐஐடி மையத்தில் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனர்களின் சந்திப்பு, இசைஞானி இளையராஜா இசை கற்றல் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா, பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் ரூ.700 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் திரு மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரையிலும், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, சென்னையில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகரம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் பயணிக்கும் பாதையில் உள்ள சில சாலைகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் குறித்த தீவிர கண்காணிப்பும் வாகன சோதனையும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.