📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 07:33 AM

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்: முதல்வர் விஜய், உலக தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்: முதல்வர் விஜய், உலக தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடி, நேற்று 76வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், முதல்வர் விஜய், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் விஜய்: வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

ரஷ்ய அதிபர் புடின்: இந்திய மக்களிடையே மரியாதையையும், சர்வதேச அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள்ள மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியா - ரஷ்யா இடையிலான கூட்டணியை வலுப்படுத்துவதில், அவரது தனிப்பட்ட பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி: என் நண்பர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு உடல்நலமும், ஆற்றலும், வெற்றியும் கிடைக்க வேண்டுகிறேன்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன்யாகு: என் நண்பர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாம் இணைந்து நம் கூட்டணியை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம்.