பிரதமரிடம் அளித்த மனுக்கள்: விஜய்க்கு சாதகம்!
புதுடில்லி: பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில் நலத்திட்டங்களுக்கு நிதி உதவி, மேகதாது அணை விவகாரம் என, பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
மனுக்களை ஆராய்ந்து, இந்த மனுக்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து, தமிழக அரசுக்கு உதவ முடியும் என ஒரு, 'நோட்' போட்டு, தனக்கு தெரிவிக்கும்படி, தன் இரண்டாவது முதன்மை செயலரான, சக்திகாந்த தாசுக்கு உத்தரவிட்டுள்ளாராம் மோடி.
தமிழக கேடரைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி; ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி வகித்தவர். தற்போது, பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இரண்டாவது முதன்மை செயலர் -பதவியில் உள்ளார். இவர், தமிழக முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கேபினட் செயலர் பதவி, மத்திய அரசின் முக்கிய பதவி. அனைத்து துறை செயலர்களாக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தலைவர் இந்த கேபினட் செயலர். இந்த பதவியில் இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதன். இவரும் விஜயை சந்தித்துள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழகத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் விஜய். அமைச்சகத்தில் பணியாற்றும் தமிழர்கள் உட்பட பலரும், விஜயுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டனராம்